கடந்த பதிவில் அறந்தாங்கி பற்றி எழுதி இருந்தேன். அறந்தாங்கி கோட்டை பற்றி எழுதும்போதே நினைவுக்கு வந்த ஊர் கிழநிலை கோட்டை.
18 ஆம் நூற்றாண்டின் முடிவில் தென் இந்தியாவின் வரி வசூல் வேந்தர்களான நவாப்கள் தங்கள் அந்திம பொழுதை நோக்கி இருந்தனர். அவர்கள் புத்திசாலிதனமாக ஏற்கனவே தங்களின் வரிவசுலிக்கும் உரிமையை வெள்ளையர்களுக்கு வழங்கி இருந்தனர்.
தமிழ் மண்ணில் கிழநிலை கோட்டை என்கிற பகுதி தஞ்சையின் அரசர்களின் கீழ் இருந்ததது. இவர்கள் சோழர்கள் அல்ல. ராஜா என்கிற பட்டத்தை இவர்கள் வெள்ளைய அரசிடம் இருந்து பெற்று இருக்கலாம். இவர்களின் ஆட்சி திறமையோ புத்திசாலித்தனமோ பற்றி எனக்கு தெரியவில்லை.
ஆனால் இவர்களின் வரிவசூல் மீது நம்பிகை இன்மை நவாபுகளுக்கும் வெள்ளையர்களுக்கும் இருந்து உள்ளது. இந்த தருணத்தில்தான் ராஜா பஹுதூர் பட்டம் பெற்று இருந்த தொண்டைமான்கள் வெள்ளையர்களின் கண்ணில் பட்டார்கள்.
தொண்டைமான்கள் கட்டபோம்மன்னையும் மருதிருவரையும் எதிர்க்க வெள்ளையர்களுக்கு தேவைப்பட்டனர்.
கிழாநிலை கோட்டை என்பது தஞ்சை அரசர்களின் கீழ் இருந்தது. இந்த கோட்டை ஒரு சிற்றரசன் கீழ் இருந்திருக்கலாம். கட்டபொம்மன் பிடிபட்டதற்கு வெள்ளைய மன்னர்கள் தொண்டைமாங்களுக்கு பரிசாய் கொடுத்த கோட்டை கிழநிலை கோட்டை.
புதுக்கோட்டையில் இன்று எதுவும் கோட்டை இருப்பதாய் தெரியவில்லை. சோழன் ஒருவனின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவன் ஒருவன் தொண்டை பெருத்து காணப்பட்டதாகவும் அவன் தனக்கு என்று ஒரு கோட்டையும் அரசும் வேண்டும் என்று கோரியதாகவும். அவனுக்கு என்று உருவாக்கப்பட்டதே புதிய கோட்டை என்றும் அதுவே புதுகோட்டை என்று அழைக்க பட்டதாக சொல்லபடுவது உண்டு.
சரி பட்டுகொட்டையில் - எதுவும் கோட்டை உள்ளதா ?
தொடரும்
Saturday, May 22, 2010
Subscribe to:
Posts (Atom)